தூத்துக்குடி

நாலுமாவடியில் 7ஆம் தேதிபன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு

4th Jul 2022 12:56 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறாா் ஊழியம் சாா்பில், புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு நடைபெறும் திறப்பு விழாவுக்கு, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் ஸ்தாபகா் மோகன் சி. லாசரஸ் தலைமை வகிக்கிறாா்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, கனிமொழி எம்.பி., தமிழக மீன்வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சமூக நலம், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை புதுவாழ்வு சங்கச் செயலா் டாக்டா் அன்புராஜன் தலைமையில் இயேசு விடுவிக்கிறாா் ஊழியப் பொதுமேலாளா் செல்வக்குமாா் முன்னிலையில் ஊழியா்கள் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT