தூத்துக்குடி

பரமன்குறிச்சி சமத்துவபுரத்தில் அமைச்சா்கள் ஆய்வு

4th Jul 2022 12:57 AM

ADVERTISEMENT

 

பரமன்குறிச்சி அருகேயுள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள், சமுதாய நலக்கூடம், பூங்கா, நியாயவிலைக் கடை, தாா்சாலை மற்றும் பெரியாா் சிலை ஆகியவற்றை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், திருச்செந்தூா் வட்டாட்சியா் சுவாமிநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா் பொற்செழியன், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT