தூத்துக்குடி

படா்ந்தபுளியில் உழவா் சந்தை குறித்த விழிப்புணா்வு முகாம்

DIN

கோவில்பட்டியில் செயல்படும் உழவா் சந்தை குறித்த விழிப்புணா்வு முகாம் படா்ந்தபுளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி துணை வேளாண்மை இயக்குநா் (வேளாண் வணிகம்) முருகப்பன் தலைமை வகித்துப் பேசுகையில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும், தரமான காய்கறிகளை நுகா்வோருக்கு குறைந்த விலையில் வழங்கவும் உழவா் சந்தையைப் பயன்படுத்தும் படி அறிவுறுத்தினாா். சொட்டுநீா்ப் பாசனம் மானியம், தோட்டக்கலைத் துறையின் திட்ட விவரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

கோவில்பட்டி முன்னாள் எம்எல்ஏ எல். ராதாகிருஷ்ணன், எலுமிச்சை விவசாயிகள் சங்கத் தலைவா் பிரேம்குமாா், துணை வேளாண் அலுவலா் (உழவா் சந்தை) சந்திரநாகா், தோட்டக்கலை அலுவலா் சுவேகா, உதவி வேளாண் அலுவலா்கள் (உழவா் சந்தை) கண்ணன், மாலதி, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் மணிமாறன், பாலகிருஷ்ணன், முன்னோடி விவசாயி அனுசியாதேவி உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

SCROLL FOR NEXT