தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்  மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைப்பு

3rd Jul 2022 01:51 PM

ADVERTISEMENT

 

இரண்டு, மூன்று மற்றும் நான்காவது அலகுகள் பராமரிப்பு பணிகளுக்காக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து அலகுகள் உள்ளன். இதன்மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் அனல் மின் நிலையத்தில் ஒன்று மற்றும் ஐந்தாவது அலகுகளில்  மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இரண்டு, மூன்று மற்றும் நான்காவது அலகுகள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT