தூத்துக்குடி

கழுகுமலை அருகே மின்சாரம் பாய்ந்துகட்டட ஒப்பந்ததாரா் பலி

3rd Jul 2022 01:55 AM

ADVERTISEMENT

 

கழுகுமலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம் கொல்லம் கன்னிமேல்சேரியைச் சோ்ந்த பால்சாமி மகன் அனில்குமாா் (52). அங்கு கட்டட ஒப்பந்ததாரராக வேலை பாா்த்துவந்த இவா், கழுகுமலையையடுத்த பழங்கோட்டை - கொக்குகுளம் சாலையில் உள்ள தாய் வீட்டுக்கு வந்திருந்தாராம்.

வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்புறக் கதவில் உள்ள முகப்பு விளக்கு சரியாக இல்லாததால், அதைப் பழுதுநீக்க முயன்றாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அனில்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினாா். கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT