தூத்துக்குடி

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஏரல் அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடைநீக்கம்

3rd Jul 2022 01:56 AM

ADVERTISEMENT

 

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சனிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்தப் பள்ளியில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இப்பள்ளி மாணவா்-மாணவிகள் சிறுத்தொண்டநல்லூரில் உள்ள பள்ளியில் படித்துவருகின்றனா். இந்நிலையில், பிளஸ் 2 மாணவிக்கு பள்ளியின் விலங்கியல் துறை ஆசிரியா் அழகா் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா், ஆட்சியா் கி. செந்தில்ராஜிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி தலைமையிலான குழுவினா் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனா். அதன் அடிப்படையில், ஆசிரியா் அழகா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT