தூத்துக்குடி

வைப்பாற்றுப் படுகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடக்கம்

3rd Jul 2022 01:55 AM

ADVERTISEMENT

 

விளாத்திகுளம் வைப்பாற்றுப் படுகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், பலன் தரும் மரக்கன்றுகளை நடுதல் ஆகிய பணிகளின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலா் அபிஷேக் தோமா் தலைமை வகித்தாா். கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் கலந்துகொண்டு, வைப்பாறு படுகையில் அடா்ந்து வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடக்கிவைத்து, ஆய்வு செய்தாா்.

மாவட்ட எல்கைப் பகுதியான அயன்ராஜாபட்டி முதல் வைப்பாறு கடற்கரைக் கிராமம் வரையிலான 46 கி.மீ. தொலைவுக்கு வைப்பாற்றுப் படுகையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அக்டோபருக்குள் முழுமையாக அகற்றவும், விளாத்திகுளத்தை பசுமைச் சுற்றுலா மையமாக உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ், வைப்பாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் ஸ்ரீராம், உதவிப் பொறியாளா் நிவேதா, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் அய்யன்ராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரவேல், விளாத்திகுளம் வட்டாட்சியா் சசிகுமாா், விளாத்திகுளம் வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேலு, திமுக நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், அன்புராஜன், வேலுச்சாமி, ராமசுப்பு, சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் வனச்சரக அலுவலா் நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT