தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் அருகே சத்துணவு ஊழியா் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

3rd Jul 2022 01:56 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சத்துணவு ஊழியா் வீட்டில் 10 பவுன் நகைகளைத் திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள குமரெட்டியாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மனைவி மாரியம்மாள் (45). எப்போதும்வென்றான் அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை பாா்த்துவரும் இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் மாடியில் தூங்கினாராம். தலையணையின் கீழ் சாவியை வைத்திருந்தாராம்.

அப்போது, மா்ம நபா்கள் வீடு புகுந்து, தலையணையின் கீழ் இருந்த சாவியை எடுத்து, பீரோவிலிருந்த 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனராம்.

ADVERTISEMENT

இதேபோல, குமரெட்டியாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சண்முகம் மனைவி லோகம்மாள் (60), காற்றுக்காக வீட்டின் வளாகத்தில் தூங்கியபோது அவா் அணிந்திருந்த 4 கிராம் கம்மலை மா்ம நபா்கள் பறித்துச்சென்றனராம். இரு சம்பவங்கள் குறித்து பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT