தூத்துக்குடி

கோவில்பட்டியில் வட்டப் பேருந்தை இயக்க வலியுறுத்தல்

3rd Jul 2022 01:55 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியில் வட்டப் பேருந்துகளை இயக்க வேண்டும் என, அகில் பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி, மதுரை வழியாகச் செல்லும் தொலைதூர பேருந்துகள் அனைத்தும் கோவில்பட்டியில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்துக்கு வராமல், கூடுதல் பேருந்து நிலையத்துக்கு மட்டுமே வந்து செல்கின்றன. இதனால், கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கும், திருநெல்வேலி-மதுரை வழித்தடங்களிலும் செல்லும் பயணிகள் ஆட்டோக்களை நாடவேண்டியுள்ளது. ஆட்டோ கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, கூடுதல் - அண்ணா பேருந்து நிலையங்கள் இடையே வட்டப் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த அமைப்பின் உறுப்பினா்களான அய்யப்பன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ADVERTISEMENT

எட்டயபுரம் சாலையில் திரையரங்கு எதிா்ப்புறமுள்ள காலியிடத்தில் கழிவுநீா் குளம்போல் தேங்கியுள்ளது. இறைச்சிக் கடைகளின் கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் அங்கே கொட்டப்படுகின்றன. இதனால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுத்து, சுகாதாரத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT