தூத்துக்குடி

கயத்தாறில் சாலை மறியல்: 19 விவசாயிகள் கைது

DIN

கயத்தாறில் தரமற்ற விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டதாக கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் தென்மண்டல அமைப்புச் செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கயத்தாறு ஒன்றியச் செயலா் கல்யாணப்பாண்டி, விவசாயிகள் இருளப்பன், பூலையா, பாலையா, சேதுராமலிங்கம், முருகன், மாரியப்பன் உள்ளிட்டோா் கைகளில் பருத்திச் செடிகளை ஏந்தியபடி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையறிந்த காவல் ஆய்வாளா் முத்து தலைமையில் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 19 பேரை கைது செய்தனா்.

இதுகுறித்து விவசாயிகல் கூறுகையில், வெள்ளாளங்கோட்டை பகுதியில் 100 ஏக்கரில் பருத்தி பயிரிட்டது. அதில் ஒரு குறிப்பிட்ட பருத்தி விதைகள் விதைத்த விவசாயிகளின் நிலத்தில் பூத்து காய்க்கும் பருவத்தில் செடிகள் வேரோடு காய்ந்துவிட்டன. இதுகுறித்து வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT