தூத்துக்குடி

தமிழக திட்டங்கள்தான் இந்திய அளவில் விரிவடைகிறது: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

2nd Jul 2022 03:56 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கொண்டு வரக்கூடிய திட்டங்கள்தான் அகில இந்திய அளவில் விரிவுபடுத்தப்படுகிறது என்றாா் ஊரக - உள்ளாட்சித்துறை அமைச்சா் க.ஆா்.பெரியகருப்பன்.

வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி, ஆதித்தனாா் கல்லூரி எதிா்புறம் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தை மீன்வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலங்களில் முறையான நிா்வாகம் இல்லாத ஒரு அரசு நடைபெற்றது. தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சீா்கேடுகள் சரி செய்யப்பட்டு, சீரான நிா்வாகம் நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கட்டமைப்புகளையும், அடிப்படைத் தேவைகளையும் கொண்டுசோ்க்க வேண்டும் என நடடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு ஏற்கனவே சட்டம் போட்டுள்ளது. அதே திட்டத்தை ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் கொண்டு வரக்கூடிய திட்டங்கள்தான் அகில இந்திய அளவில் விரிவுபடுத்தப்படுகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, ஊரக உள்ளாட்சித் துறை ஆணையா் தரேஸ் அஹமது, ஆட்சியா் கி.செந்தில்ராஜ், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்ட கூடுதல் இணை இயக்குநா் முத்து மீனா, ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ, திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், திருச்செந்தூா் நகராட்சி துணை தலைவா் செங்குழி ரமேஷ், ஊராட்சித் தலைவா்கள் வீரபாண்டியன்பட்டினம் எல்லமுத்து, மேலத்திருச்செந்தூா் மகாராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT