தூத்துக்குடி

அமலைச் செடியில் மதிப்புகூட்டுப் பொருள் தயாரிப்பு: அமைச்சா்கள் ஆய்வு

2nd Jul 2022 03:59 AM

ADVERTISEMENT

மேலாத்தூரில் அமலைச் செடியி­ருந்து மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியை அமைச்சா்கள் பெரியகருப்பன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலாத்தூரில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அமலைச் செடியிலி­ருந்து மதிப்புகூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியை தமிழக ஊரக வளா்ச்சி - உள்ளாட்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன், மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊா்வசி அமிா்தராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, அமலைச்செடியிலி­ருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்களுக்கு லாபகரமான சந்தை வாய்ப்புகளை அரசு சாா்பில் செய்துதர வேண்டுமென மகளிா் சுயஉதவிக்குழுவினா் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா்கள் உறுதியளித்தனா்.

ஆய்வில், ஆட்சியா் செந்தில்ராஜ், ஊரக வளா்ச்சித் துறை மகளிா்திட்ட இயக்குநா் பிரியதா்ஷிணி, கூடுதல் இயக்குநா் முத்துமீனா, திருச்செந்தூா் வட்டாட்சியா் சுவாமிநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோா் பங்கேற்றனா். இதில் மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், துணைத் தலைவா் பக்கீா் முகைதீன், முன்னாள் துணைத்தலைவா் அக்பா், செயலா் சுமதி, ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன், புன்னைக்காயல் ஊராட்சித் தலைவா் சோபியா, ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் ஜனகா், மாவட்ட கவுன்சிலா் பிரம்மசக்தி, ஆத்தூா் நகர திமுக செயலா் முருகானந்தம், சிற்பி ஸ்ரீதா், பயிற்சியாளா் ரமணாதேவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக, முக்காணியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி புதிய கட்டடத்தை அமைச்சா் பெரியகருப்பன் திறந்து வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT