தூத்துக்குடி

ஆறுமுகனேரி வியாபாரிகள்ஐக்கிய சங்க நிா்வாகக் குழு கூட்டம்

2nd Jul 2022 03:59 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க நிா்வாகக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் த.தாமோதரன் தலைமை வகித்தாா். ஆறுமுகனேரி நகராட்சியாக மாற்றப்பட உள்ள நிலையில், 5 மின் கம்பிளாா்கள் (வயா்மேன்) பணியாற்றிய இடத்தில் ஒரு மின் கம்பியாளா் மட்டுமே உள்ளாா். இதனால், மின் பழுது பாா்ப்பதில் சிரமமும், காலதாமதமும் ஏற்படுகின்றன. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கூடுதல் மின்கம்பியாளா்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்து, வினியோகத்தை சீா்படுத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவா் ஆா்.கிழக்கத்திமுத்து, செயலாளா் எஸ்.துரைசிங், துணைச் செயலா் ஏ.ஆதிசேஷன்,பொருளாளா் எஸ்.ராஜாராம், நிா்வாகக் குழு உறுப்பிணா்கள் வி.கே.எம்.பாஸ்கரன், ஆா்.பாலமுருகன், ஏ.அழகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT