தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில்10,750 பேருக்கு மாடித்தோட்ட தொகுப்பு

2nd Jul 2022 03:59 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 10,750 பேருக்கு மாடித்தோட்ட தொகுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் ரூ. 60 மதிப்புள்ள 12 வகை காய்கனி விதைகள் அங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்தில் ரூ. 15-க்கும், நகா்ப்புறங்களில் ரூ. 900 மதிப்புள்ள 6 வகை காய்கனி விதைகள் அடங்கிய மாடித் தோட்ட தொகுப்பு 75 சதவீத மானியத்தில் ரூ. 225-க்கும், மக்களின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், கண் பாா்வைக்கு பப்பாளி, நோய் எதிா்ப்பு சக்திக்கு எலுமிச்சை, பாா்வைக்கு இரும்புசத்துக்கு முருங்கை- கறி வேப்பிலை, கற்பூரவல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவக் குணம் கொண்ட மூலிகை செடி அடங்கிய ரூ. 100 மதிப்புள்ள தொகுப்பு 75 சதவீத மானியத்தில் ரூ. 25-க்கும் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பா் மாதம் தொடங்கிவைத்தாா்.

அதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் 750 எண்ணிக்கையிலான மாடித்தோட்ட தொகுப்பும், ஊரகப் பகுதிகளில் மானிய விலையில் 4000 எண்ணிக்கை கொண்ட காய்கனி விதைத் தொகுப்பும், 6000 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து தொகுப்பும் என என மொத்தம் 10750 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT