தூத்துக்குடி

தூத்துக்குடியில் காது கேளாதோா் கூட்டமைப்பினா் போராட்டம்

2nd Jul 2022 03:57 AM

ADVERTISEMENT

மாதாந்திர உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்பது உளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் காது கேளாதாா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோா் முன்னேற்றம் மற்றும் நலவாழ்வு சங்கம் மற்றும் காதுகேளாதோா் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், தமிழக அரசு தொகுப்பு வீடு வழங்க வேண்டும், மாதாந்திர உதவி தொகையாக ரூ. 1000 வழங்குவதை ரூ. 3000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

அமைப்பின் பொதுச் செயலா் மெய்கண்டன் தலைமை வகித்தாா். இதில், காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளிகள் பலா் கோரிக்கைகள் அடங்கிய பதாககைகளை கையில் ஏந்தியும், சைகை மொழியில் செய்து காண்பித்தும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT