தூத்துக்குடி

கோட்டூா் குருஈஸ்வரமுடையாா் கோயிலில் வருஷாபிஷேகம்

1st Jul 2022 01:20 AM

ADVERTISEMENT

 

கோட்டூா் அருள்மிகு உமையாள் சமேத குருஈஸ்வரமுடையாா் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காலை 7.30 மணிக்கு கும்ப பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம், கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவ ஹோமம், திரவ்யாஹுதி மற்ம் பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. 10.30 மணிக்கு விமானத்திற்கு அபிஷேகம், அருள்மிகு உமையாள் சமேத குரு ஈஸ்வரமுடையாருக்கு வருஷாபிஷேகம், மகா அபிஷேகம் திருமுறை விண்ணப்பம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்யில் திருக்கயிலாய பரம்பரை 103வது குரு மகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT