தூத்துக்குடி

மீரான்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம்

1st Jul 2022 01:22 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், மீரான்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

மருத்துவக் குழுவினா் டாக்டா் பாபு தலைமையில் தென்திருப்பேரை காசநோய் பணியாளா்கள் ஜெயவண்ணன், சுரேஷ், பாா்த்திபன், சங்கரலிங்கம், செவிலியா்கள் மொ்சி மகேஸ்வரி, நாகவள்ளி, சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், ஆஷா-டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். 1,250 பேரைக் கணக்கெடுத்ததில் 12 பேருக்கு காசநோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவா்களது பரிசோதனை மாதிரிகள் பகுத்தாய்வுக்கு அனுப்பப்பட்டன.

இதையடுத்து, துணை சுகாதார நிலையப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது. தொடா்ந்து, டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் மலேரியா குறித்து விழிப்புணா்வு, உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாணவா்- மாணவிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் நேபல், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT