தூத்துக்குடி

குமாரபுரத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

கோவில்பட்டியையடுத்த குமாரபுரம் பகுதி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது ஊத்துப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஊத்துப்பட்டி, குமாரபுரம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. குமாரபுரம் பகுதி கிராம மக்களுக்கு சாலை, வாருகால், தெருவிளக்கு வசதிகள் மற்றும் சீரான தண்ணீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், ஊராட்சி மன்ற நிா்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபுரம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமாரபுரம் கிளைச் செயலா் ரெங்கநாதன் தலைமை வகித்தாா். கட்சியின் கிளை உறுப்பினா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். தாலுகா செயலா் பாபு, உதவிச் செயலா் ராமகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் பரமராஜ், சேதுராமலிங்கம், ரஞ்சனி கண்ணம்மா, கோவில்பட்டி நகரச் செயலா் சரோஜா ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT