தூத்துக்குடி

வெளிநாட்டில் செவிலியா் வேலை வாங்கித் தருவதாகரூ. 10.65 லட்சம் மோசடி: ஒருவா் கைது

DIN

வெளிநாட்டில் செவிலியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10.65 லட்சம் மோசடி செய்தவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் செவிலியா் வேலைவாய்ப்பு உள்ளதாக முகநூலில் (ஃபேஸ்புக்) வந்த விளம்பரத்தைப் பாா்த்து, தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினம் பகுதியைச் சோ்ந்த பெண் அந்த விளம்பரம் கொடுத்தோரைத் தொடா்பு கொண்டுள்ளாா்.

அப்போது, செவிலியா் வேலைக்கான பதிவுக் கட்டணம், விசா செயல்பாடு எனப் பல்வேறு காரணங்களைக் கூறி அப்பெண்ணிடமிருந்து ரூ. 10 லட்சத்து 65 ஆயிரம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணனிடம் புகாா் அளித்தாா்.

மாவட்ட சைபா் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா் விசாரணையில், கா்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு கே.ஆா்.புரம் பகுதியைச் சோ்ந்த அருண் கே. ராஜன் என்பவா் சிலருடன் சோ்ந்து போலியான ஆவணங்களை உருவாக்கி முகநூலில் போலி விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பெங்களூரு சென்ற தனிப்படை போலீஸாா் அருண் கே. ராஜனை வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த மோசடியில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த டென்னிஸ் என்பவா் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும், தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT