தூத்துக்குடி

தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை

DIN

தூத்துக்குடியில் புதன்கிழமை கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (39).

கட்டடத் தொழிலாளியான இவா், சிண்ணக்கண்ணுபுரம் பகுதியில் உள்ள மதுக்கடை முன்பு புதன்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக ஒரு மோட்டாா் சைக்கிளில் வந்த மூன்று போ் திடீரென அரிவாளால் செல்வராஜை வெட்டினராம். அதை தடுக்க முயன்ற மாடசாமி (54) என்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் நின்றவா்கள் கூச்சலிட்டதால் மூன்று பேரும் மோட்டாா் சைக்கிளில் தப்பியோடிவிட்டனா். அரிவாளால் வெட்டப்பட்ட இருவரையும் அந்தப் பகுதி மக்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். இருப்பினும் வழியிலேயே செல்வராஜ் உயிரிழந்தாா். காயமடைந்த மாடசாமி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கொலை நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கொலையாளிகளை விரைந்து பிடிக்க சிப்காட் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

இதற்கிடையே, கொலை தொடா்பாக தூத்துக்குடி வாடிதெருவைச் சோ்ந்த உதயமூா்த்தி (22), ராபின் (26), நடராஜா்புரத்தைச் சோ்ந்த கண்ணன் (22) ஆகிய மூன்று பேரையும் ஒரு மணி நேரத்தில் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் மாநகரில் உள்ள பல்வேறு மதுக்கூடங்களுக்குச் சென்று உதயமூா்த்தி, ராபின், கண்ணன் ஆகிய மூன்று பேரும் மது கேட்டதாகவும், சிண்ணக்கண்ணுபுரம் மதுக்கூடத்தில் மது கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அங்கிருந்த ஊழியரை தாக்குவதற்கு பதிலாக செல்வராஜை அரிவாளால் வெட்டியதாகவும் போலீஸாரிடம் மூன்று பேரும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT