தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் குடியரசு தினவிழா

27th Jan 2022 08:16 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி , கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அமுதா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பாளா் கமலவாசன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி, காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளா் உதயசூரியன், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம், மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளா் (பொ) முனியசாமி, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கோட்டப் பொறியாளா் ராஜேஸ்வரன், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்தில் உதவி ஆணையா் சுடலைமுத்து, வணிக வரி அலுவலகத்தில் ஆய்வாளா்கள் கருப்பசாமி, பால்துரை, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வட்டாரச் செயலா் பிரான்சிஸ் மற்றும் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பேச்சிமுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, பேரூராட்சி அலுவலகங்களில் ஆ.முருகன் (கழுகுமலை), பாலசுப்பிரமணியன் (கயத்தாறு), சுரேஷ் (கடம்பூா்) ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் தேசியக் கொடியேற்றினாா்.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் தமிழரசன், காங்கிரஸ் கட்சி சாா்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் காமராஜ், கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சங்கத் தலைவா் பழனிச்செல்வம், நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நாடாா் உறவின் முறை சங்க துணைத் தலைவா் செல்வராஜ், நாடாா் நடுநிலைப்பள்ளியில் சங்கச் செயலா் ஜெயபாலன், புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் இயக்குநா் உஷாராணி, கவுணியன் மெட்ரிக் பள்ளியில் பள்ளி முதல்வா் பாலு, ஈராச்சி பரிமேலழகா் இந்து நடுநிலைப்பள்ளியில் பள்ளிச் செயலா் தங்கமாரியப்பன், தெற்கு கோனாா்கோட்டை தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜு, கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் பேரூராட்சி தலைவா் சுப்பிரமணியன், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியை ஷொ்லி, கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் கல்லூரிச் செயலா் ப.மகேந்திரன், நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாணவா் விடுதி முதன்மை மேலாளா் சுப்பிரமணியன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் ராணுவ வீரா் மாரிச்சாமி, கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் அழகர்ராமானுஜம் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT