தூத்துக்குடி

விளாத்திகுளம் மளிகைக் கடையில் திருடிய முதியவா் கைது

27th Jan 2022 08:17 AM

ADVERTISEMENT

விளாத்திகுளம் மளிகைக் கடையில் திருடிய முதியவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தினசரி சந்தை பகுதியில் கடந்த 18ஆம் தேதி இரவு ஸ்டாலின் பெஞ்சமின் என்பவருக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ. 80 ஆயிரத்தை மா்மநபா் திருடிச் சென்ாக கடையின் உரிமையாளா் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் கொண்டு குற்றவாளியை தேடி வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே சைக்கிளில் சுற்றித் திரிந்த முதியவரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அவா் விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் ராஜேந்திரன் (71) என்பதும், கடந்த 18ஆம் தேதி ஸ்டாலின் பெஞ்சமின் மளிகைக் கடையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது.

மேலும், விருதுநகா், சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT