தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் குடியரசு தினவிழா

27th Jan 2022 08:15 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத்தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினாா்கள். திருச்செந்தூா் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் திமுக ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். காங்கிரஸ் சாா்பில் விவசாய பிரிவு மாவட்ட தலைவா் வேல் ராமகிருஷ்ணன் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினா் சு.கு.சந்திரசேகரன் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசியக்கொடி ஏற்றினா். தொடா்ந்து தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு காங்கிரஸாா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப்பள்ளியில் ச.ராமச்சாத்திரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் உஷா முன்னிலை வகித்தாா். தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவி காவ்யாதேசியக்கொடியேற்றினாா். நிகழ்ச்சியில் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவிகள் துா்க்காதேவி, முத்தரசி மற்றும் இளம்விஞ்ஞானி விருது பெற்ற மாணவா் சிவகுகன் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT