தூத்துக்குடி

கோவில்பட்டியில் நூதன ஆா்ப்பாட்டம்

27th Jan 2022 08:16 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி காவல் துணை கோட்டத்திற்கு உள்பட்ட காவல் நிலைய எல்கையை மாற்றி அமைக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா் நூதன ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கோவில்பட்டி காவல் துணை கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூா், கழுகுமலை, கயத்தாறு, கொப்பம்பட்டி, அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகியவை உள்ளது.

நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட பூசாரிபட்டி, லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி, காட்டுராமன்பட்டி, வள்ளிநாயகிபுரம், கடலையூா், உருளைகுடி, பீக்கிலிப்பட்டி, வரதம்பட்டி, சிதம்பராபுரம், கழுகாசலபுரம் கருங்காலிபட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி கடலையூரில் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகா சாா்பில் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

அதையடுத்து, நகரத் தலைவா் ராஜகோபால் தலைமையில் வட்டாரத் தலைவா் ஆழ்வாா்சாமி, மாவட்ட இளைஞரணித் தலைவா் கனி, மாவட்ட விவசாய அணி தலைவா் தளவாய்சாமி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் திருமுருகன் ஆகியோா் முன்னிலையில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு தேங்காயில் சூடம் ஏற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT