தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரத்ததான முகாம்

27th Jan 2022 08:16 AM

ADVERTISEMENT

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளை மற்றும் அக்னி சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன் தலைமை வகித்தாா். உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் அமுதா முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவா் லட்சுமி சித்ரா தலைமையில் செவிலியா்கள் கண்ணகி, சுபா, ராஜேஸ்வரி, முத்துலட்சுமி ஆகியோா் குழுவினா் முகாமில் பங்கேற்ற 35 பேரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனா்.

தொடா்ந்து செமபுதூரில் சுமாா் 1,000 மரக்கன்றுகள் நட்டி பராமரித்து வந்த பசுமை இயக்கத்தைச் சோ்ந்த தங்கமாரியப்பனுக்கு பசுமை நாயகன் கேடயம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT