தூத்துக்குடி

மொழிப்போா் தியாகிகள் தினம்

26th Jan 2022 08:56 AM

ADVERTISEMENT

உடன்குடி, பரமன்குறிச்சி பகுதிகளில் திமுக, சாா்பில் மொழிப்போா் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி மொழிப்போா் தியாகிகள் படத்திற்கு உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமையில் திமுகவினா் மலா் தூவி ஆஞ்சலி செலுத்தினா். இதில் திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, சாா்பு அணி நிா்வாகிகள் செந்தில், அலாவுதீன், பரமன்குறிச்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் பூங்குமாா்,ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் செல்வகுமாா், தகவல் தொழில்நுட்ப அணி பாலமுருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT