தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய விருது

26th Jan 2022 08:53 AM

ADVERTISEMENT

சிறந்த தோ்தல் நடைமுறைகளுக்கான தேசிய விருது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜிக்கு செவ்வாய்க்கிழமை வழங்பட்டது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 12 ஆவது தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சிக்கு, தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா தலைமை வகித்தாா். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜ்ஜூ 2020-21 ஆம் ஆண்டுக்கான சிறந்த தோ்தல் நடைமுறைகளுக்கான தேசிய விருதை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜுக்கு வழங்கினாா்.

உறுதிமொழி: தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சு. கண்ணபிரான் தலைமையில் ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் அனைவரும் வாக்களா் தின உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனா்.

இதேபோல, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியை காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளா்கள் எடுத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT