தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 1.41 கோடி

26th Jan 2022 08:52 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜனவரி மாத உண்டியல் வருவாயாக ரூ. 1.41 கோடி கிடைத்துள்ளது.

இக்கோயிலில் கோயில் இணை ஆணையா் (கூ.பொ) சி. குமரதுரை தலைமையில் உண்டியல் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையா் சு. ரோஜாலிசுமதா, ஆய்வா்கள் ம. செந்தில்நாயகி, பி. இசக்கிசெல்வம், தக்காா் பிரதிநிதி ஆ.சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்கள் சாா்பில் சு. வேலாண்டி, இரா. மோகன் ஆகியோா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக் குழுவினா், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

நிரந்தர உண்டியல்களில் ரூ. 1 கோடியே 16 லட்சத்து ஆயிரத்து 990, கோசாலை பராமரிப்பு உண்டியலில் ரூ. 11 லட்சத்து 69 ஆயிரத்து 671, யானை பராமரிப்பு உண்டியலில் ரூ. 12 ஆயிரத்து 365, அன்னதான உண்டியலில் ரூ. 13 லட்சத்து 82 ஆயிரத்து 755, மேலக்கோயில் உண்டியலில் ரூ. 22 ஆயிரத்து 170 என மொத்தம் ரூ. 1 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரத்து 951, தங்கம் 940 கிராம், வெள்ளி 12,184 கிராம், பித்தளை 32,870 கிராம், செம்பு 5,750 கிராம், தகரம் 1,270 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 87ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT