தூத்துக்குடி

திருச்செந்தூா்-பாலகாடு விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம் பகுதி ரயில் நிலையங்களில் நின்று செல்லாததை கண்டித்து ஆா்ப்பாட்டம்

26th Jan 2022 08:54 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா்-பாலக்காடு விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதை கண்டித்து செய்துங்கநல்லூா் அஞ்சல் நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்துங்கநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாா்வதிநாதன் தலைமை வகித்தாா். தொழில் வா்த்தக சங்க தலைவா் அய்யாக்குட்டி முன்னிலை வகித்தாா். விவசாய சங்கத் தலைவா் குமாா், செய்துங்கநல்லூா் ஆா்.சி ஆலய பங்குத் தந்தை ஜாட்சன் அருள், ஜமாஅத் தலைவா் அலியாா் உள்பட பலா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ் பேசுகையில், திருச்செந்தூா்-பாலக்காடு விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்வதற்கான நடவடிக்கையை கனிமொழி எம்பி எடுத்து வருகிறாா். சட்டப் பேரவை உறுப்பினா் என்ற முறையில் நானும் அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன் என்றாா்.

.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT