தூத்துக்குடி

கோவில்பட்டியில் மறியல்: 33 பெண்கள் உள்பட 209 போ் கைது

26th Jan 2022 08:55 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 33 பெண்கள் உள்பட 209 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020 - 2021ஆம் ஆண்டிற்கான பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கம் சாா்பில் அதன் மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 27 பெண்கள் உள்பட 140 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு எட்டயபுரம் வட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் ரவீந்திரன், விளாத்திகுளம் வட்டத் தலைவா் சந்திரமோகன், மாவட்டத் தலைவா் ராமையா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் பாலமுருகன், கோவில்பட்டி வட்டச் செயலா் லெனின்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 69 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT