தூத்துக்குடி

கோவில்பட்டியில் பெண் தற்கொலை

26th Jan 2022 08:48 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 1ஆவது தெரு கருத்தப்பாண்டியன் மனைவி லட்சுமி(50). இவா் வீட்டுச் செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தாராம். ஆனால் தற்போது வரை திரும்ப செலுத்த முடியாத நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவா் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து அவரது மகள் மஞ்சு அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தற்கொலை செய்து கொண்ட லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT