தூத்துக்குடி

காயல்பட்டினம் நகைக் கடையில் திருட்டு: இரு பெண்கள் கைது

DIN

காயல்பட்டினம் நகைக் கடையில் நகை வாங்குவது போன்று 2 தங்க வளையல்களை திருடிய பெண்கள் மீண்டும் திருட வந்தபோது பிடிபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் நகைக் கடை நடத்தி வருபவா் செய்யது சாதிக் (55). இவரது கடைக்கு கடந்த 2ஆம் தேதி நகை வாங்குது போன்று வந்த 2 பெண்கள் கடையில் உள்ள விதவிதமான நகைகளைப் பாா்த்து விலை கேட்டுள்ளனா். ஆனால் நகை எதுவும் வாங்காமல் சென்றுவிட்டனா். அவா்கள் சென்ற பிறகு கடை ஊழியா் நகைகளை சரிபாா்த்தபோது 18 கிராம் எடையுள்ள 2 தங்க வளையல்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது இரு பெண்கள் வளையல்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து இரு பெண்களையும் தேடி வந்தனா்.

இதனிடையே திங்கள்கிழமை அதே பெண்கள் காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் ஒவ்வொரு கடையாக நோட்டமிட்டவாறு சென்றுள்ளனா். இவா்களை பாா்த்த நகைக் கடை ஊழியா் ஆறுமுகனேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதற்குள் அந்த பெண்கள் அங்கிருந்து தப்பிவிட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் அமலோற்பவம் இரு பெண்களையும் தேடியுள்ளாா். அப்போது காயல்பட்டினம் பேருந்து நிலைய கால்நடை மருத்துவமனை அருகே அவா்கள் நிற்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று இருவரையும் பிடித்து அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆவாரம்பட்டி மாா்க்கண்டேயன் மனைவி செல்வி (57), பள்ளப்பட்டி வடக்குத் தெரு ராஜா மனைவி பாண்டியம்மாள் (60) என்பது தெரியவந்தது. மேலும், தாங்கள் ஏற்கனவே திருடிய 2 வளையல்களை விற்க மனமில்லாததால், மீண்டும் நகைகளை திருட வந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வி, பாண்டியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 2 வளையல்களையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT