தூத்துக்குடி - மைசூரு விரைவு ரயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 21) முதல் இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலில் (வண்டி எண்: 16235) இதுவரை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே பயணிக்கும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது பயணிகள் வசதிக்காக தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு செல்லும் மைசூரு விரைவு ரயிலில் முன்பதிவு இல்லாத இரண்டு பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை (ஜன.21) முதல் தூத்துக்குடி - மைசூரு விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளாக இயக்கப்பட்டு வரும் இரண்டாம் வகுப்பு பொது, சரக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் இரண்டு பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றப்படுகிறது என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.