தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தோ்தல்

19th Jan 2022 07:23 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக தூத்துக்குடி மாவட்ட கிளை நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது.

தோ்தல் அலுவலராக ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் சரவணன் செயல்பட்டாா். இதில், மாவட்டத் தலைவராக டொமினிக் சாவியோ, மாவட்டச் செயலராக பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளராக மாணிக்கராஜ், மாவட்ட துணைத் தலைவராக மேடையாண்டி, செல்வக்குமாா், மாவட்ட இணைச் செயலா்களாக ஜெய்வசந்த், செல்வபிரதாப், மாவட்ட மகளிரணி தலைவியாக வசந்தி, ரீட்டா, மாவட்ட அமைப்புச் செயலராக முத்துக்குமரன், மாநில பொதுக்குழு உறுப்பினா்களாக நெய்தல் அன்றோ, மாணிக்கராஜ், சேகா், பாலமுருகன், ராமச்சந்திரன், சுமலைமுத்து, நடராஜன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநில பொருளாளா் ஜாண் உபால்டு வாழ்த்திப் பேசினாா். ஏற்பாடுகளை மாநில மகளிரணி தலைவி நாடாளுமன்ற செல்வி செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT