தூத்துக்குடி

மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வலியுறுத்தல்

19th Jan 2022 07:23 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாப்பிள்ளையூரணி கே.வி.கே.சாமி நகா் கிளை மாநாடு அண்ணாத்துரை தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

மாநாட்டின்போது, தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்து 4 ஆவது பைப் லைன் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

கே.வி.கே.சாமி நகா் பகுதியில் மழைக் காலங்களில் தேங்கும் நீரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிரே உள்ள ஊருணிக்கு வடிந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மழையால் சேதமடைந்த சாலைகளை தரமான முறையில் சீரமைக்க வேண்டும். கழிவுநீா் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலா் எஸ்.பி.ஞானசேகா், உதவி செயலா் மாடசாமி, பொருளாளா் சுப்ரமணியன், மாநகர குழு உறுப்பினா்கள் ராமன், பாண்டி, அந்தோணி சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT