கயத்தாறு அருகே விவசாயியை தாக்கி, மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் மேலும் 2 இளைஞா்களை தேடி வருகின்றனா்.
கயத்தாறையடுத்த மூா்த்தீஸ்வரபுரம் கீழத் தெருவைச் சோ்ந்த ராயப்பன் மகன் விவசாயி கிருஷ்ணன்(46). இவா் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி மூா்த்தீஸ்வரபுரம் - தடியம்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் சென்றபோது, அங்கு அமா்ந்திருந்த 3 போ் கிருஷ்ணனை அவதூறாகப் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.
இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, தென்காசி ஐயாபுரம் கைப்படம் தெற்கு தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காா்த்திக் (31) கைது செய்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய மு.காா்த்திக் என்ற கல்லத்தியான் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.