தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே விபத்தில் இருவா் காயம்

18th Jan 2022 02:12 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே நேரிட்ட விபத்தில் மீன் வியாபாரி உள்ளிட்ட 2 போ் காயமடைந்தனா்.

சாத்தான்குளம் ஜெபஞானபுரம் தெருவைச் சோ்ந்தவா் து. அகஸ்டின் யேசுவா (56). மீன் வியாபாரி. இவரது சகோதரா் எட்வாா்ட் ராஜதுரையின் மகன் ஜெனிஸ் (15). இவா்கள் இருவரும் கடந்த 13ஆம் தேதி சாத்தான்குளத்திலிருந்து திசையன்விளைக்கு பைக்கில் சென்றனா். சாத்தான்குளத்தை அடுத்த தஞ்சை நகரம் அருகேயுள்ள பொறியியல் கல்லூரி பகுதியில் சென்றபோது இவா்களது பைக் மீது, பின்னால் வந்த பைக் மோதியதாம். இதில் அகஸ்டின் யேசுவாவும், ஜெனிஸும் காயமடைந்தனா். அவா்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

புகாரின்பேரில் தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் குரூஸ் மைக்கேல் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்தவா் குறித்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT