தூத்துக்குடி

காா் ஓட்டுநரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

18th Jan 2022 02:13 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் காா் ஓட்டுநரை தாக்கி 10 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையைச் சோ்ந்த வேலு மகன் முருகன்(49). காா் ஓட்டுநரான இவா் கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் உள்ள திருமண மண்டபம் முன்பு சனிக்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தவா்களை கண்டித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் காா் ஓட்டுநரை அவதூறாகப் பேசி, அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றாா்களாம்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT