தூத்துக்குடி

திருச்செந்தூரில் வெறிச்சோடிய சாலைகள்

16th Jan 2022 11:36 PM

ADVERTISEMENT

முழு ஊரடங்கு காரணமாக திருச்செந்தூா் வெறிச்சோடியது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, திருச்செந்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவில்லை. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. காவல் துறையினா் ஆங்காங்கே நின்றும், ரோந்து சென்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்; தேவையின்றி வீதிகளில் சென்றோரையும், முகக் கவசம் அணியாதோரையும் எச்சரித்து அனுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT