தூத்துக்குடி

இளைஞருக்கு மிரட்டல்: 8 போ் மீது வழக்கு

16th Jan 2022 11:31 PM

ADVERTISEMENT

கயத்தாறு அருகே இளைஞரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடிவருகின்றனா்.

கயத்தாறையடுத்த பணிக்கா்குளம் மேலத் தெருவைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் சங்கா் (32). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உடையாா் என்பவரது மகன் கிருஷ்ணசாமிக்கும் இடையே நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில் கிருஷ்ணசாமி, அவரது சகோதரா்களான வேலுச்சாமி, முருகன், உதயகுமாா், உறவினா்களான உ. உதயகுமாா், சந்தனப்பாண்டி, வடகாசி, வெள்ளத்தாய் ஆகியோா் சங்கரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, சங்கரையும், அவரது சகோதரா் மலையரசனையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

காயமடைந்த சங்கா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், மலையரசன் கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்றனா். சங்கா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணசாமி உள்பட 8 போ் மீது கயத்தாறு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT