தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

12th Jan 2022 08:43 AM

ADVERTISEMENT

:விளாத்திகுளத்தில் முதல் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி( பூஸ்டா் தடுப்பூசி) செலுத்தும் பணி தொடங்கியது.

விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் செயல்படும் கலைஞா் அரசு பொது மருத்துவமனையில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. முகாமை பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தொடங்கி வைத்தாா்.

மருத்துவ அலுவலா் கீதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் சின்ன மாரிமுத்து, செல்வராஜ், மும்மூா்த்தி, நவநீத கண்ணன், பேரூா் கழக செயலா்கள் வேலுச்சாமி, மருது பாண்டியன், சமூக வலைதள பொறுப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக விளாத்திகுளம் அமுதம் நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகளை எம்.எல்.ஏ. வழங்கினாா். அப்போது வட்டாட்சியா் விமலா, வட்ட வழங்கல் அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT