தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

12th Jan 2022 08:44 AM

ADVERTISEMENT

விளாத்திகுளத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிய வழக்கில் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

விளாத்திகுளம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (40). இவா் கடந்த டிசம்பா் 11ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு, திரும்பி வந்து பாா்த்தபோது, கதவு திறந்துகிடந்ததாம். பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான 11 சவரன் தங்க நகைகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்ததாம்.

புகாரின்பேரில், விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஆய்வாளா் இளவரசு தலைமையிலான தனிப்படையினா் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினா். இத்திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் விவேக்ராஜா (30) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து, நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியைக் கைதுசெய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT