தூத்துக்குடி

வளா்ச்சித் திட்டங்கள்: கனிமொழி எம்.பி. ஆய்வு

12th Jan 2022 08:44 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மக்களவை உறுப்பினரும் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவருமான கனிமொழி திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கனிமொழி எம்.பி. தலைமை வகித்தாா். சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா, தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டப் பணிகளின் முன்னேற்றம், செயல்பாடு விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கனிமொழி எம்.பி. கேட்டறிந்தாா். அனைவரும் இணைந்து செயல்பட்டு, மக்களுக்கான திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

மாவட்ட வருவாய் அலகில் வருவாய்த் துறையில் பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியா்களின் வாரிசுதாரா்கள் 3 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவா் வழங்கினாா்.

ADVERTISEMENT

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், எம்.சி. சண்முகையா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT