தூத்துக்குடி

புத்தன்தருவையில் கால்நடை விழிப்புணா்வு முகாம்

12th Jan 2022 08:43 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவையில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புத்தன்தருவை ஊராட்சித் தலைவா் சுனைகா பீவி தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கோட்ட உதவி இயக்குநா் செல்வக்குமாா், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் சந்தோசம் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தச்சன்விளை கால்நடை உதவி மருத்துவா் சிவராமகிருஷ்ணன், கால்நடை ஆய்வாளா் வெங்கடேஷ், பராமரிப்பு உதவியாளா் முருகேசன் ஆகியோா் அடங்கிய குழு ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் குடற்புழு நீக்கம் , கருவூட்டல், சினை பரிசோதனை, சினையுறா மாடுகள் சிகிச்சை அளித்து தடுப்பூசி செலுத்தினா். இதில் 424 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

ஏற்பாடுகளை விவசாய உற்பத்தியாளா் குழு தலைவா் கிருஷ்ணன், பொருளாளா் வெள்ளத்துரை, செயலா் பட்டுத்துரை, திருத்துவராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT