தூத்துக்குடி

நாசரேத் வாரச் சந்தையில் வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு’

12th Jan 2022 08:44 AM

ADVERTISEMENT

நாசரேத் வாரச் சந்தையில் இரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பொருள்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவா் என பேரூராட்சி செயல் அலுவலா் பால்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையொட்டி தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையொட்டி நாசரேத் வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை பேரூராட்சி செயல் அலுவலா் தலைமையில் பணியாளா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தையில் முகக் கவசம் அணியாமல் கரோனா பரவும் வகையில் வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அனைவரும் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

சந்தை வியாபாரிகள் கண்டிப்பாக அடுத்த வாரம் 2ஆம் தவனை தடுப்பூசி போட்டு அதற்கான சான்றிதழை வைத்திருந்தால் மட்டுமே சந்தையில் கடை நடத்திட அனுமதிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் பால்ராஜ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT