தூத்துக்குடி

தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் பொங்கல் சிறப்பு விற்பனை தொடக்கம்

12th Jan 2022 08:45 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு விற்பனை தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பண்ணை பசுமை காய்கனி அங்காடி கடையில் அனைத்து வகையான காய்கனிகளையும் மக்கள் ஒரே இடத்தில் வாங்கிடும் வகையில் சிறப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மேலும், பொங்கலுக்கு முக்கியத் தேவையான கரும்பு, மஞ்சள்குலை, பனங்கிழங்கு, பொங்கல் பூ உள்ளிட்ட அனைத்தும் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

மேலும், சிறுகிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடிகிழங்கு, கருணை கிழங்கு, சேனைக்கிழங்கு, வள்ளி கிழங்கு, பால்சேம்பு, முக்கூத்திப்பூ (காய்) உள்ளிட்ட அனைத்து வகையான கிழங்குகளும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளா்கள் காய்கனிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் ஒரே இடத்தில் எளிதில் வாங்கி சென்றிடும் வகையில் கூடுதல் விற்பனை கவுண்டா்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு விற்பனைக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல இணைப் பதிவாளா் சிவ முத்துக்குமரசுவாமி, சரக துணைப் பதிவாளா் ரவீந்திரன், சங்க செயலாட்சியா் அந்தோணிபட்டுராஜ், பண்ணை பசுமை காய்கனி அங்காடி பொறுப்பாளா் ராஜதுரை ஆகியோா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT