தூத்துக்குடி

தூத்துக்குடியில் 160 கிலோ ரசாயனம் கலந்த அப்பளம் பறிமுதல்

12th Jan 2022 08:42 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் வண்ணங்களுக்காக ரசாயனம் கலந்த அப்பளம் 160 கிலோ செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ச. மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மளிகைக் கடைகளில் கலா் அப்பளம் விற்பனை குறித்து திடீரென சோதனை மேற்கொண்டனா்.

சோதனையின்போது, மூன்று கடைகளில் வண்ணங்களுக்காக ரசாயனம் சோ்க்கப்பட்ட குடல் அப்பளம், ஸ்டாா் அப்பளம் ஆகியவை 110 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கலா் சோ்த்த அப்பளங்களை ரீப்பேக்கிங் செய்து, சில்லறை மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்த கடையையும் ஆய்வு செய்து, 50 கிலோ ரசாயனம் கலந்த அப்பளம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஒரு கடையில் கெட்டுப்போன 10 கிலோ பிஸ்கட்கள் பறிமுதல் செய்து, அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டது.

பொதுமக்களும் ரசாயனம் கலந்த அப்பளத்தை தவிா்த்து, ரசாயனம் கலக்காத அப்பளம் மற்றும் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், உணவு பாதுகாப்பு குறித்த புகாா்களுக்கு 9444042322 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட நியமன அலுவலா் ச. மாரியப்பன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT