தூத்துக்குடி

கயத்தாறு கோயிலில் எம்எல்ஏ ஆய்வு

12th Jan 2022 08:43 AM

ADVERTISEMENT

கயத்தாறு அருள்மிகு முத்துக்கிருஷ்ணேஸ்வரா் (திருநீலகண்ட ஈஸ்வரா்) கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கயத்தாறு அருள்மிகு திருமலை நாயகி சமேத முத்துக்கிருஷ்ணேஸ்வரா் என்ற திருநீலகண்ட ஈஸ்வரா் கோயில் சுமாா் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். இக்கோயிலில் பல்வேறு பகுதிகள் சிதிலமடைந்துள்ளதாகவும், 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்களும் பழுதடைந்திருந்தன. இதை பழுதுபாா்க்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதையடுத்து திருக்கோயில் திருப்பணிக்காக கடந்த அதிமுக அரசு ரூ.97.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில் இத்திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை செவ்வாய்க்கிழமை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின் போது ஸ்தபதி மாரியப்பன், மேற்பாா்வையாளா் ராமமூா்த்தி மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னா் கழுகுமலை பேரூராட்சி பகுதியில் சீவலப்பேரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் தற்போது 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்கப்பட்டு வருவதாக வந்த புகாரையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் முருகனிடம் எம்எல்ஏ ஆலோசனை நடத்தி, அப்பகுதி பொதுமக்களுக்கு 5 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT

மேலும் கீழக்குளம் ஊருணி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT