தூத்துக்குடி

கால்நடைத் துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்

1st Jan 2022 02:09 AM

ADVERTISEMENT

கால்நடைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரத்தில் நடைபெற். மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் ராஜன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் மு.கோகிலா, உடன்குடி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசி பொன்ராணி, மெஞ்ஞானபுரம் ஊராட்சி மன்றத் தலைவி கிருபா, உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்து பேசியது: தமிழகத்தில் முதன் முறையாக கால்நடைகளுக்கென மெஞ்ஞானபுரம் அருகே சத்யா நகரில்

ரூ. 16.25 லட்சத்தில் மேய்க்கால் நிலத்தில் தீவனம் பயிரிடுதல், நில மேம்பாடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கால்நடை விவசாயிகளுக்கு ரூ. 1.60 லட்சம் வரை எந்த வித பிணையும் இன்றி கிசான் கடன் அட்டை மூலம் கடன் வழங்கப்படுகிறது. கால்நடைத்துறையில் காலியாக உள்ள மருத்துவா்கள், உதவியாளா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் அவா். தொடா்ந்து, கால்நடை வளா்ப்புத் துறையில் சாதனை படைத்தவா்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக சத்யா நகரில் அமைக்கப்பட்டு வரும் மேய்க்கால் நில மேம்பாட்டு பணிகளை அமைச்சா், ஆட்சியா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

இதில், கால்நடை மருத்துவத்துறை உதவி இயக்குநா் செல்வகுமாா், துணை இயக்குநா்கள் ராதாகிருஷ்ணன், பூதலிங்கம், அன்டணி, சந்தோஷம் முத்துக்குமாா், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ஆஸ்கா், மகாவிஷ்ணு, ரவிராஜா, இளங்கோ, சக்திவேல்,சிராஜூதீன், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம்,

ராஜேஷ், திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT