தூத்துக்குடி

பெரியதாழை கடற்கரையில் மணல் கொட்டுவது தொடா்பாக பிரச்னை: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு

1st Jan 2022 02:07 AM

ADVERTISEMENT

பெரியதாழை கடற்கரையில் மணல் கொட்டுவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை குறித்து அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஆட்சியா் செந்தில்ராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

சாத்தான்குளம் வட்டம் பெரியதாழை கடற்கரையில் கடல் அரிப்பு காரணமாக தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. தூண்டில் வளைவு காரணமாக கடற்கரையில் மணல் அரிப்பு காரணமாக படகுகள் நிறுத்த முடியாமல் காணப்பட்டது. இதனால் மணல் அரிக்கப்பட்ட இடத்தில் மணல் நிரப்பி படகுகள் நிறுத்த ஏற்பாடு செய்து தர மீனவா்கள் வலியுறுத்தினா். அதன்படி மாவட்ட கலெக்டா் நிதியில் கடலில் ஒரு பகுதியில் மணலை அள்ளி கரைப்பகுதியில் கொட்டிடும் பணி தொடங்கப்பட்டது. மணல் அள்ளும் இடம் நெல்லை மாவட்டம் குட்டம் ஊராட்சி பகுதியில் அமைந்ததால் அப்பகுதி மக்கள் மணல் அள்ளுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தனால் அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் கடற்கரையில் படகுகள் நிறுத்த முடியாத நிலை இருந்து வந்ததால் மீனவா்கள் மிகுந்த சிரமம் அடைந்தனா். இதனால் மீனவா்கள் இப்பிரச்னையை தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேணடும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ ஆகியோரிடம் வலியுறுத்தினா்.

இதையடுத்து மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்னன் வெள்ளிக்கிழமை பெரியதாழைக்கு தந்து சம்பவ இடத்தை பாா்வையிட்டாா். அப்போது மீனவா்கள் படகை கரையில் நிறுத்த முடியாததால் தினமும் கூலிக்கு ஆள் வைத்து படகுகளை கரைக்கு கொண்டு வரும் நிலை உள்ளது. ஆதலால் கடற்கரையில் அரிப்பான பகுதியில் மணல் கொட்டி விரைவில் நிரப்பிட வேண்டும் எனவும், படகுகள் நிறுத்திட போதுமான இட வசதியும் இல்லையெனவும். அதனை விரிவு படுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், அமைச்சரிடம் மாற்று ஏற்பாடாக மணல் அடித்து படகுகள் நிறுத்தம் இடத்தை அதிகரித்து ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா். அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீனவா்களிடம் இப்பிரச்னை நிரந்தரமாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

ADVERTISEMENT

அப்போது பெரியதாழை பங்குத்தந்தை சுசீலன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் கோகிலா, சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா், உதவி பொறியாளா் அருணா, மாநில திமுக மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலா்கள் ஏ.எஸ். ஜோசப், ஏ. பாலமுருகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் எஸ். சுரேஷ்குமாா், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா், எம்எல்ஏஉதவியாளா் சந்திரபோஸ், தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ஏ. லூா்துமணி, மாவட்ட மீனவரணி தலைவா் சுரேஷ், மாநில திமுக பொதுக்குழ உறுப்பினா்கள் பசுபதி, இந்திரகாசி, மாவட்ட திமுக பிரதிநிதிகள் சந்தியாகு, சித்திரை, ஊராட்சி திமுக செயலா் ராஜபாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT